Popular Posts

Thursday, 3 August 2017

27 வருடங்கள்

கணத்தோடுதான் கடந்திருக்கிறோம் மீள்  நிரப்ப முடியாத அந்த வலிகள், மன்னித்து மறக்க முடியாத அந்த நினைவுகள், வலி நிறைந்த வெளியில் சொல்லமுடியாமல் தவித்த  பரிதாப நிலைகள், பொருளாதார சரிவுகள்,   தூண்களை  இழந்த மண்டபங்கள் போல்  பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இன்றுவரை சுமந்திருக்கிறோம்.,

என்னவென்று சொல்வது இந்த விடுதலை போராட்டத்தை? இது தமிழ் போராட்டமல்ல, தமிழ் இன போராட்டம் அந்த போராட்டத்தை ஆயுதமேந்தியவர்களுடன் போராடி வென்று இருந்தால் பாராட்டலாம் ! நிராயுதபாணியாக ஆண்டவனை பிராதித்தவர்களுடன் போராடி வெல்வதை வெற்றியெண்டு கூறும் மானிடர்களை என்னவென்று சொல்வது??

103 உடல்கள் இரண்டு பள்ளிகளிலும் அன்றயதினம் உடன் மாண்டவர்கள், அதன் பின் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள், இதனால் வாழ்நாள் வரை காயங்களுக்கு உள்ளாகி அதனால் இறந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள்  என கணக்கிட்டால் இரு பள்ளிகளிலும் தொழுதவர்களில் மிகச் சிலர் மட்டுமே தப்பி இருக்க கூடும்.

கிட்டத்தட்ட 100க்கு  மேட்பட்ட குடும்பங்களின் வேர்களை இறை ஆலயத்தில் பறித்தவர்களை  விடுதலை போராளிகள் என்பதை ஏற்றுக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. இறைஉதவியால் இப்போது  பெரும்பாலும் தூண்களை இழந்த மண்டபங்கள், வேர் அறுபட்ட மரங்கள் எல்லாம் தடுமாறி எழுந்து நிட்கின்றன.

இவை இழந்தவையும், கடந்து வந்தவையும் கணமானவை, கடினமானவை.
மன்னிக்க முடிந்தாலும் மறக்க முடியாதவை. இவை என்னுடையதும் எனது ஊரினதும் உள்ளக்குமுறல்கள். கணவனை இழந்த மனைவியின் நிலை,சகோதரனை இழந்த உடன்பிறப்புகளின் நிலை, மகனை இழந்த பெற்றவர்களின் நிலை, தந்தையை இழந்த பிள்ளைகளின் நிலை இவற்றையெல்லாம் அருகில், சொந்த ஊரில்  கூட இருந்து உணர்ந்து இருக்கிறேன்.

இவை எல்லாம் எப்பொழுதும் அழிக்க முடியாத வடுக்கள் இரு இறைஇல்லத்திலும் இன்றுவரை மறைக்காமல் இருக்கும் அடையாளம் போன்று எங்கள் உள்ளங்களில்.


மபாஸ் பரீட்.

பரீட் ( MCM பரீட் ) இற்றைக்கு 27 வருடங்களுக்கு முன் (1990 ம் ஆண்டு) காத்தான்குடி பள்ளிவாயல்களில்   நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் ஷகீதாக்கப்பட்ட 103 புனிதர்களில் ஒருவர். 

Saturday, 1 December 2012

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் 
கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான் 

கார் மேகம் கூட கண்ணீர் வடிக்கிறது 
கன்னியரின் நிலை கண்டு,
கண்சிமிட்டும் நேரத்தில் மின்னலும் மறைந்து போகிறது 
காலம் கடந்த கன்னியரின் கவலை கண்டு.

கடக்கும் காலமெல்லாம் கண்ணெதிரே கண்சிமிட்டி
கால்மீது கால்போட்டு தாலாட்டு பாடுகிறது சீதனம்,
கண்ணுற்றோம் சீதன கொடுமைகளை களைந்திடுவோம்,
காதோடு காது வைத்து திருமணத்தை நடாதிடுவோம்.

தீண்டாமையையை தீண்டாத சமூகத்தில் சீதனம் மட்டும்
தீட்டு போல் நீள்கின்றதொன்றாய்,
வாழ்கின்ற காலத்திலும் தடுத்திடுவோம் இதனை
வாழாத காலத்தில் முற்றாக அழித்திடுவோம்.

ஆதலால்

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள்
கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்.

நன்றியுடன்.,

Wednesday, 27 June 2012

கணம் நிரம்பிய வலிகள்

அக்கினியால் கூட அணைக்க முடியவில்லை 
எமது நினைவுகளை 
அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள் 
ஏன் அடி மனதினுள்,

கோழி வளர்த்து முட்டை விற்று பிழைப்பு நடாதுபவளின்
மகன்தானே எப்படி எனக்கு மூன்று வேலை
சோறு போடுவான் என்று நினைதாயோவ்??

நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில்!!
எனது கேள்விக்கான பதில் யாது?
ஒ.. மறந்துவிட்டாய? சந்தோசமாக வாழ்கிராயாடி?
கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர்பாட்கவில்லை,

முறிந்து பிரிந்து போகும் காதலே மீண்டும் வந்துவிடாதே
எனது வாழ்வில்
இப்பொழுதான் மரித்து உயிர்த்தெழுந்து இருக்கிறேன்
மரிப்பின் வலியும் வேதனையும் அறிந்தவன் நான்
மீண்டுமொரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை
என் உடம்பில்,

உன்னை மறக்கும் வேளையில் மரணித்துவிட வேண்டும் என
எழுதியவனும் நான்தான்,
உன் நினைவால் சிந்திய கண்ணீர் துளிகளை விட
கசக்கியறிந்த கவிதைகள்தானடி அதிகம்
அத்துணையும் வலிகள் நிரம்பிய பாரம் கூடிய
கவிதை துளிகள்.

கடைசியாகத்தான் உணர்த்து கொண்டேன்
துன்பங்களும் வலிகளும் நிரந்தரமல்ல
இதுவும் கடந்து போகும்...மபாஸ் பரீத்.

Tuesday, 25 October 2011

நினைவுகள்

மறந்துபோய் கூட என்னால்
மறக்க முடியவில்லை
உன் நினைவுகளை
மறக்க போகும் அக்கணம்
மரணித்துவிட வேண்டும்
உன் நினைவுகளுடன்.

கடினமாக கரையும் இதயம்

அனுதினமும் உன்னை நிணைதேன்,
ஆசையுடன் உன்னை அழைத்தேன்,
அருகில் நீ இருப்பாய் என நிணைத்தேன்,
ஆசையுடன் நீ தந்த அந்த
கவருடன் கூடிய கடதாசி
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்
தாண்டி என்னை பிழைக்க வைக்கிறது.

நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை
பெற முடியாத இடத்தில் தொலைத்ததை
எண்ணி அழுவதக்கு,
நான் ஒன்றும் தேவதாஸ் இல்லை
தாடி வளர்த்து கையுடன் மதுபான
போத்தலுடன் திரிவதக்கு,
நான் ஒன்றும் உன்னைப் போல் இல்லை
கணப் பொழுதில் கல்யானதுக்காய்
காதலனை மாற்றுவதக்கு,
என்னை நீ மறந்த அன்றே நான் உன்னை
மறந்துவிட்டேன்,
கனத்துவிட்ட இதயம் கரைய மறுக்கின்றது,
நீ விட்டு போன மறக்க முடியாத நினைவுகளை.

கவி விட்டு கரைத்து பார்க்கிறேன், கடினமாக
கரைகிறது என் இதயம்
இனி நான் நானாக வாழவேண்டும் என்
நெஞ்சு நிறைந்த காதலின் நினைவோடு,,,,

Wednesday, 21 September 2011

முதல் கவிதை

ஒரு கோடி வானவில்
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்...

ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து

ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்

ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்

... மறந்து விடு என்னை....
அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...
(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

Monday, 30 May 2011

கைவிடப்பட்ட காதலன்

நட்பு காதல் பிரிவு அனுபவிக்கும் போதுதான்
அர்த்தங்கள் உணரப்படுகின்றன.
நட்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால்
எண்ணுள்ள ஏற்பட்ட மாற்றம்
உன்னை காதலிக்க வைத்தது.
நீ என்னை புரிந்து கொண்ட புரிதலின் வலிமை
நம் பிரிவு வேரூன்ற வழிவகுத்தது.
மனமிணைந்த எம்மை உன் தந்தையின்
தன்மானம் பிரித்து விட்டது.
பிரிதலின் வலியை நான் இன்னும் அனுபவிக்கிறேன்.
என்னால் காதல் வயப்பட்ட நீ நன்றாக வாழவேண்டும்.
உனக்கு பிறக்கபோகும் ஆண் குழந்தைக்கு என் பெயரை
மட்டும் வைத்து விடாதே,
ஏன் பெயர் மீது கொண்ட சாபம் (பாசம் )என்னோடு போகட்டும்
கணவனுடன் சந்தோசமாக வாழ்கிறாய் என்று கேளிவியுரும்
பொதுகண்களால் வழிந்தோடும் ஆனந்தக் கண்ணீரால்
மனது சற்று தளர்துதான் போகிறது
எனது பிராத்தனைகள் கூடஇப்போது உனக்காகவும்தான்,
மீண்டும் உன்னை பார்த்துவிடக்கூடாது என்று
எத்துனை விடயங்களை செய்ய துணியும் எனக்கு என்னவோ
என் காதலை மட்டும் வெளிப்படுத்த முடியவில்லை.
என்னதான் ஒருதலைப் பட்சம் என்று நீ நினைத்தாலும்
சத்தியமாக நான் உன்னை காதலித்த
காதல் பொய்யானது என்று நினைத்துவிடாதே
ஏனனில் நான் காதலித்தது நிஜம்,
என்னால் நீ காதலிக்கப்பட்டது நிஜம்,
நான் உன்னை மறக்க நினைப்பது நிஜம்,
இப்பொழுதுவரை என்னால் மறக்க முடியவில்லை என்பதும் நிஜம்.

இவ்வளவுகாலமும் புரிய முடியா வாழ்க்கை தத்துவங்கள்
இப்போளுதுமட்டும் கனவிலும் புரிகிறது.
இன்ப துன்பங்களின் ஏற்ற இறக்கங்களும் புரிகிறது.
இனியும் காதலிப்பேன் பிரியாத, பிரிக்க முடியாத
விலகாத, விலக்க முடியாதவற்றை காதலிப்பேன்
ஆனால் இப்போது மட்டும் நான் உன்னை காதலித்து
இருப்பின் நிச்சயம் நீ என்னை கைவிட்டு இருக்க மாட்டாய்.