Posts

Showing posts from 2010

வாழ்க்கை

அன்புக்கான ஏக்கம் அனுபவிக்கும் போதுதான் உணரப்படும்.
அதனால் தான் என்னவோ தெரியவில்லை, பலவிடயங்களில் அடிபட்ட பிறகுதான் வலிகள்
உணரப்படுகின்றன. அடிக்கும் போதும் அடிபடும் போதும் இதைப்பற்றி பெரிதாக எண்ணுவது இல்லை. அழகென்பது ரோஜாக்களையோ அல்லது அதிலுள்ள முட்களையோ அல்ல, அனுபவிக்க கூடியவையும் அழகு அல்ல,அழகென்பது ரசிக்க கூடியது, உதாரணம் அழகென்பது ரோஜா செடி முள்ளும் மலரும் இலையும் காம்பும் கொண்டது. வாழ்க்கையும் இப்படிதான் வாழும்போது வாழ்க்கையை விளங்கமுடியவில்லை என்று குறை
கூறுபவர்கள், தாம் இதனை வாழும்போது கூறிகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை.
வாழ்க்கை வாழ்வதற்கு என்று வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் படகினை பரந்து
விரிந்து கிடக்கும் கடலின் மீது செலுத்த முடியும்,
காலநிலை மாறுபட்டாலும் படகினை தரையில் செலுத்த முடியாது... படகை செலுத்த நீர்
தான் வேண்டும். இயற்கை எதை எதை மாற்ற வேண்டும் என்ற பேதமின்றி மாற்றுகிறது.மனிதனின் மனதில் எழுகின்ற உச்ச கட்ட எண்ண அலைகளை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒப்பிட முடியும், வியக்க வைப்பது விஞ்ஞானம் என்று கூறுபவர்கள் விசித்திரமான மறு முனையை சற்று தள்ளி
வைக்கிறார்கள்.
எல்லாவற்றையும் …

மாற்றங்கள்

மாற்றங்கள் தேவை மண்ணில் அல்ல மனிதர்களின் மனதில் வெளியே வெண்மையுடனும் உள்ளே கருமையுடனும் உலா வரும் மனிதர்கள் ஏராளம் உலகில் எங்கு சென்றாலும் இத்தகைய மனிதர்களை காண்பது எளிது நல்ல மனிதர்களை காண்பதென்பது மிக மிக அரிது மனிதர்களின் மனம் மாறாதவரை செயல்களில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது அவ்வாறு மாற்றம் இருந்தாலும் ஏதோ உள் நோக்கம் இருக்கும்
மனதில் உள்ளதை எம்மால் அறிய முடியாது இறைவன் ஒருவனே அதை அறிவான் பேசும் போது கேட்க நன்றாக இருக்கும் பிறகு பார்த்தல் செயல்கள் மிக மோசமாக இருக்கும்
எங்கு சென்றாலும் எத்தனை அறிவுரைகளை பெற்றாலும் மனதில் மாற்றம் வரும் வரை செயல்களில் உண்மையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது
மனதில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏங்கும் மபாஸ் பரீத்

நேசம் ..

நிலவின் வெப்பத்தை இரவில் அனுபவிததுண்டா ??
அழகிய குறிஞ்சிப்பூவின் மொட்டை திறந்ததுபர்ததுண்டா ??
சிரித்துக்கொண்டு பிறந்த குழந்தையை கண்டதுண்டா ??
முதல் முதல் சொன்ன பொய்யின் ஆழம் அறிந்ததுண்டா ??
இல்லையனின் நீ உன்னை நேசி
உலகம் உன்னை நேசிக்கும்.

மபாஸ் பரீத்

காதல்

உண்மையை சொல்கிறேன்
காதலிக்காதீர்கள் ஏனனில்
காதல் அவ்வளவு கடினமானதல்ல .
காதல் தெய்வீகமானது.
தயவுசெய்து கடவுளை கேலி செய்யாதீர் சகோதரா !!!

தாய்

கடன் தீர வில்லை அம்மா
உனக்கு நான் தர வேண்டிய
ஈன்ற கடன்,

முடியவில்லை அம்மா என்னால்
முடியும் வரை முயட்சிக்கிரன்
முடிந்தவரை உன்னுடன் இருக்க,

சொந்தங்களை காட்டி வளர்த்தாய்
சொத்து களுக்காய் பிரியும் என்றாய்
சொன்னது போல் நடந்தது அம்மா,

தந்தையை காட்டியது கூட இல்லை அம்மா
தந்தை இல்லை என்பது கூட தெரியவில்லை
தந்தையாக கூட இருந்தாய் அம்மா,

புது யுகம் காட்டினாய் அம்மா
புது ஆடை அணிவிதாய் அம்மா
புதிதாய் நீ உடுத்ததில்லை அம்மா,

பண்புள்ளவனாய் வளர்த்தாய் அம்மா
படிப்பும் கூட ஊற்றினாய் அம்மா
படி ஏற வைக்கவில்லை அம்மா நீ,

அன்னையாக மட்டும் இல்லை அம்மா
அனைத்துமாய் இருந்தாய் அம்மா
அருகிலில்லை எனும்போது அழுகின்றேன் அம்மா,

உலகறிய வைத்தாய் அம்மா நீ
உயிருள்ள வரை உன்னை
உளமார பாராட்ட வேண்டும் அம்மா,

கலப்படமற்ற உள்ளம் அம்மா உனது
கற்பை கூட காப்பாற்றினாய் அம்மா எனது
கள்ளரயில் கூட காணிக்கை கட்டனும் அம்மா,

கடைசியாக கூறவேண்டும் அம்மா
மறு ஜென்மம் ஒன்று இருந்தால் நான் உனக்கு
மகனாக பிறக்கவேணும் அம்மா தங்கை எனக்கு
மகளாக பிறக்க வேண்டும் அம்மா,

கூலிவேல செய்தாவது உனக்கு
கூழ் ஊத்த வேணும் அம்மா உன்
கூடவே வாழ்த்து உன்
மடியில் சாக வேண்டும் அம்மா,,,,,

ஏக்கத்துடன…

அழகிய ஐரோப்பா

அழகான பெண்களை அதிகம் காண கிடைத்தது ஐரோப்பாவில். அளவு குறைந்த ஆடைகளுடன், அளவுக்கு மிகுதியான முகப்பூச்சு முகத்திலும், வெறுமனே பொறாமையும் வஞ்சகமும் கூடிய காழ்புணர்வு அகத்திலும், கை எடுத்து கும்பிட வேண்டிய பெண் இனம் காலடியில் குடிபோதையில் தன்னைத் தெரியாது கிடப்பதை கண்டு மனம் வெம்புகிறது.
அவளை நினைத்து, அல்ல அவள் ஒரு காலத்தில் இவளை ஒத்த பெண்ணுக்கு பிறந்து இருப்பாளா, அல்லது இவளை ஒத்த பெண்ணை ஈன்றெடுப்பாளா என்ற எண்ணம் மேலோங்குகையில்.
வார இறுதி விடுமுறை நாட்கள் வாழ்வில் வரக்கூடாத நாட்கள் ஐரோப்பிய பெண்களுக்கு, இயற்கை அழிவுகள் என்பது பூமித்தாய் பொறுக்காமல் பொங்கி எழும் நிகழ்வுகள் எனலாம். ஐரோப்பா நாடுகளில் இரவு விடுதிகளையும் சில தங்குமிட களியாட்ட விடுதிகளையும் முற்றாக நிறுத்தினால் இயற்கை அனர்த்தத்தின் பாதியும், திருமணத்தை கட்டாயப்படுத்தினால் முழு அளவிலான இயற்கை அனைர்த்தங்களையும் நிறுத்த முடியும் என்கின்ற எண்ணம் பலரிடம் ஆணித்தரமாக உள்ளது என்ற விடயம் சற்று விஞ்ஞானிகளைம் அதிர்ச்சிக்குள்ளாகி சிந்திக்க தூண்டுகிறது.
மிகுதி சில்லறையில் தெரியாமல் குறையும் ஒரு சதத்திக்கு கணக்கு கேட்கும் அல்லது ஒரு சதத்திக்காக சில நிம…

முற்று பெரும் வாழ்வு.

ரோஜாவின் வாசம் மனிதனுக்கு கிடைத்த மாபெரிய பொக்கிஷம்,
தண்ணீரின் சுவை இயற்கையின் அமிர்தம்,
அதிகாலை இளம் சூடு உற்சாகத்தின் புதிய மாத்திரை,
காலை நேர மர நிழல் தூக்கம் ஆயுளை கூட்ட சிறந்த வழி,
புண்முறுவலுடன் கூடிய முகம் மகிழ்ச்சியின் மறு பிறப்பு,
அறியாத வயதில் கிடைத்த முதல் நண்பன் தோழமையின் படிக்கட்டு,
பெற்றுக்கொண்ட அறிவு அனுபவிக்க போதுமான ஆதாரம்,
தாய் தந்தை வாழ்வின் ஆணி வேர்,
சொந்த பந்தம் அவமானதின் முதல் வழி,
முதல் காதல் சகல பந்தத்திக்குமான விதிவிலக்கு,
மனைவி மகிழ்ச்சி யாக இருக்கும் பொது மகிழ்விப்பவள்,
நண்பர்கள் தோல்வின் வெற்றிப் படிக்கட்டுகள்,
பட்டங்கள் பார்த்த,கிடைத்த வேலைகளுக்கான இலஞ்சங்கள்,
மொத்தத்தில் மனித வாழ்வு மனிதனுக்கு இடப்பட்ட சாபம்,
விடியலை நோக்கிய பயணம் என்றும் சாபவிமொர்சனதிக்காகவும் பயனளிக்கட்டும்.

நன்றியுடன்
மபாஸ் பரீத்.

கடன்

கொடுக்க முடியவில்லை
வாழ்நாள் முழுதுமாய் உழைத்த போதிலும்
கொடுக்க முடியவில்லை
வாழ்வாதாரம் முடிகின்ற போதிலும்
கொடுக்க முடியவில்லை என்னால் ,
முழுவதும் சிவந்த அந்த உயிரினால்
கேட்க கூட முடியவில்லை.
தான் சுமந்த பத்து மாத கடனினை