Popular Posts

Thursday, 28 October 2010

தாய்


கடன் தீர வில்லை அம்மா
உனக்கு நான் தர வேண்டிய
ஈன்ற கடன்,

முடியவில்லை அம்மா என்னால்
முடியும் வரை முயட்சிக்கிரன்
முடிந்தவரை உன்னுடன் இருக்க,

சொந்தங்களை காட்டி வளர்த்தாய்
சொத்து களுக்காய் பிரியும் என்றாய்
சொன்னது போல் நடந்தது அம்மா,

தந்தையை காட்டியது கூட இல்லை அம்மா
தந்தை இல்லை என்பது கூட தெரியவில்லை
தந்தையாக கூட இருந்தாய் அம்மா,

புது யுகம் காட்டினாய் அம்மா
புது ஆடை அணிவிதாய் அம்மா
புதிதாய் நீ உடுத்ததில்லை அம்மா,

பண்புள்ளவனாய் வளர்த்தாய் அம்மா
படிப்பும் கூட ஊற்றினாய் அம்மா
படி ஏற வைக்கவில்லை அம்மா நீ,

அன்னையாக மட்டும் இல்லை அம்மா
அனைத்துமாய் இருந்தாய் அம்மா
அருகிலில்லை எனும்போது அழுகின்றேன் அம்மா,

உலகறிய வைத்தாய் அம்மா நீ
உயிருள்ள வரை உன்னை
உளமார பாராட்ட வேண்டும் அம்மா,

கலப்படமற்ற உள்ளம் அம்மா உனது
கற்பை கூட காப்பாற்றினாய் அம்மா எனது
கள்ளரயில் கூட காணிக்கை கட்டனும் அம்மா,

கடைசியாக கூறவேண்டும் அம்மா
மறு ஜென்மம் ஒன்று இருந்தால் நான் உனக்கு
மகனாக பிறக்கவேணும் அம்மா தங்கை எனக்கு
மகளாக பிறக்க வேண்டும் அம்மா,

கூலிவேல செய்தாவது உனக்கு
கூழ் ஊத்த வேணும் அம்மா உன்
கூடவே வாழ்த்து உன்
மடியில் சாக வேண்டும் அம்மா,,,,,

ஏக்கத்துடன்
மபாஸ் பரீத் .
(இது எனது தாய்க்கு சமர்ப்பித்த கவிதை.)

அழகிய ஐரோப்பா

அழகான பெண்களை அதிகம் காண கிடைத்தது ஐரோப்பாவில்.
அளவு குறைந்த ஆடைகளுடன், அளவுக்கு மிகுதியான முகப்பூச்சு முகத்திலும்,
வெறுமனே பொறாமையும் வஞ்சகமும் கூடிய காழ்புணர்வு அகத்திலும்,
கை எடுத்து கும்பிட வேண்டிய பெண் இனம் காலடியில் குடிபோதையில் தன்னைத் தெரியாது
கிடப்பதை கண்டு மனம் வெம்புகிறது.

அவளை நினைத்து, அல்ல அவள் ஒரு காலத்தில் இவளை ஒத்த பெண்ணுக்கு பிறந்து இருப்பாளா, அல்லது இவளை ஒத்த பெண்ணை ஈன்றெடுப்பாளா என்ற எண்ணம் மேலோங்குகையில்.

வார இறுதி விடுமுறை நாட்கள் வாழ்வில் வரக்கூடாத நாட்கள் ஐரோப்பிய பெண்களுக்கு, இயற்கை அழிவுகள் என்பது பூமித்தாய் பொறுக்காமல் பொங்கி எழும் நிகழ்வுகள் எனலாம்.
ஐரோப்பா நாடுகளில் இரவு விடுதிகளையும் சில தங்குமிட களியாட்ட விடுதிகளையும்
முற்றாக நிறுத்தினால் இயற்கை அனர்த்தத்தின் பாதியும், திருமணத்தை
கட்டாயப்படுத்தினால் முழு அளவிலான இயற்கை அனைர்த்தங்களையும் நிறுத்த முடியும்
என்கின்ற எண்ணம் பலரிடம் ஆணித்தரமாக உள்ளது என்ற விடயம் சற்று விஞ்ஞானிகளைம்
அதிர்ச்சிக்குள்ளாகி சிந்திக்க தூண்டுகிறது.

மிகுதி சில்லறையில் தெரியாமல் குறையும் ஒரு சதத்திக்கு கணக்கு கேட்கும் அல்லது
ஒரு சதத்திக்காக சில நிமிடங்களாக காத்து இருக்கும் மேதகு சமூகத்தினர், கணக்கின்றி
அதிக விலை கொடுத்து வாங்கும் மிக கேவலமான பொருட்கள் ஒன்றும் அவர்களை வலுவுடன்
வாழவைப்பது இல்லை என்பதும், மிக கேவலமான கொண்டம் பக்கட்டுகளுக்கு இருபாலாரினது
வயது கட்டுபாட்டு நிர்ணயம் கிடையாது என்பதும் அவர்களே சிந்தித்து உணர
முடியாதவர்களாக உள்ளனர் என்பதும் உலக அழிவின் ஆதாரங்களாக தெரிகின்றன.

ஆகவே உலக மயமாக்கலுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் சில முக்கியஸ்தர்கள்,
முக்கியஸ்த நாடுகள் தயவு செய்து இதனையும் உற்று நோக்குங்கள்.
அறிவு என்பது வெறுமனே கற்று கொள்வதற்கு மட்டுமல்ல, அதனை பிரயோகப்படுத்தி அதன்
மூலம் படிப்பினை பெறுவதுமே பரி பூரண அறிவு
நல்ல சமூகம் நல்ல சிந்தனை.

கலக்கத்துடன்
மபாஸ் பரீத்

Tuesday, 26 October 2010

முற்று பெரும் வாழ்வு.

ரோஜாவின் வாசம் மனிதனுக்கு கிடைத்த மாபெரிய பொக்கிஷம்,
தண்ணீரின் சுவை இயற்கையின் அமிர்தம்,
அதிகாலை இளம் சூடு உற்சாகத்தின் புதிய மாத்திரை,
காலை நேர மர நிழல் தூக்கம் ஆயுளை கூட்ட சிறந்த வழி,
புண்முறுவலுடன் கூடிய முகம் மகிழ்ச்சியின் மறு பிறப்பு,
அறியாத வயதில் கிடைத்த முதல் நண்பன் தோழமையின் படிக்கட்டு,
பெற்றுக்கொண்ட அறிவு அனுபவிக்க போதுமான ஆதாரம்,
தாய் தந்தை வாழ்வின் ஆணி வேர்,
சொந்த பந்தம் அவமானதின் முதல் வழி,
முதல் காதல் சகல பந்தத்திக்குமான விதிவிலக்கு,
மனைவி மகிழ்ச்சி யாக இருக்கும் பொது மகிழ்விப்பவள்,
நண்பர்கள் தோல்வின் வெற்றிப் படிக்கட்டுகள்,
பட்டங்கள் பார்த்த,கிடைத்த வேலைகளுக்கான இலஞ்சங்கள்,
மொத்தத்தில் மனித வாழ்வு மனிதனுக்கு இடப்பட்ட சாபம்,
விடியலை நோக்கிய பயணம் என்றும் சாபவிமொர்சனதிக்காகவும் பயனளிக்கட்டும்.

நன்றியுடன்
மபாஸ் பரீத்.

Wednesday, 20 October 2010

கடன்


கொடுக்க முடியவில்லை
வாழ்நாள் முழுதுமாய் உழைத்த போதிலும்
கொடுக்க முடியவில்லை
வாழ்வாதாரம் முடிகின்ற போதிலும்
கொடுக்க முடியவில்லை என்னால் ,
முழுவதும் சிவந்த அந்த உயிரினால்
கேட்க கூட முடியவில்லை.
தான் சுமந்த பத்து மாத கடனினை