தாய்


கடன் தீர வில்லை அம்மா
உனக்கு நான் தர வேண்டிய
ஈன்ற கடன்,

முடியவில்லை அம்மா என்னால்
முடியும் வரை முயட்சிக்கிரன்
முடிந்தவரை உன்னுடன் இருக்க,

சொந்தங்களை காட்டி வளர்த்தாய்
சொத்து களுக்காய் பிரியும் என்றாய்
சொன்னது போல் நடந்தது அம்மா,

தந்தையை காட்டியது கூட இல்லை அம்மா
தந்தை இல்லை என்பது கூட தெரியவில்லை
தந்தையாக கூட இருந்தாய் அம்மா,

புது யுகம் காட்டினாய் அம்மா
புது ஆடை அணிவிதாய் அம்மா
புதிதாய் நீ உடுத்ததில்லை அம்மா,

பண்புள்ளவனாய் வளர்த்தாய் அம்மா
படிப்பும் கூட ஊற்றினாய் அம்மா
படி ஏற வைக்கவில்லை அம்மா நீ,

அன்னையாக மட்டும் இல்லை அம்மா
அனைத்துமாய் இருந்தாய் அம்மா
அருகிலில்லை எனும்போது அழுகின்றேன் அம்மா,

உலகறிய வைத்தாய் அம்மா நீ
உயிருள்ள வரை உன்னை
உளமார பாராட்ட வேண்டும் அம்மா,

கலப்படமற்ற உள்ளம் அம்மா உனது
கற்பை கூட காப்பாற்றினாய் அம்மா எனது
கள்ளரயில் கூட காணிக்கை கட்டனும் அம்மா,

கடைசியாக கூறவேண்டும் அம்மா
மறு ஜென்மம் ஒன்று இருந்தால் நான் உனக்கு
மகனாக பிறக்கவேணும் அம்மா தங்கை எனக்கு
மகளாக பிறக்க வேண்டும் அம்மா,

கூலிவேல செய்தாவது உனக்கு
கூழ் ஊத்த வேணும் அம்மா உன்
கூடவே வாழ்த்து உன்
மடியில் சாக வேண்டும் அம்மா,,,,,

ஏக்கத்துடன்
மபாஸ் பரீத் .
(இது எனது தாய்க்கு சமர்ப்பித்த கவிதை.)

Comments

Popular posts from this blog

சீதனக் கொடுமை

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

முற்று பெரும் வாழ்வு.