Posts

Showing posts from November, 2010

வாழ்க்கை

அன்புக்கான ஏக்கம் அனுபவிக்கும் போதுதான் உணரப்படும். அதனால் தான் என்னவோ தெரியவில்லை, பலவிடயங்களில் அடிபட்ட பிறகுதான் வலிகள் உணரப்படுகின்றன. அடிக்கும் போதும் அடிபடும் போதும் இதைப்பற்றி பெரிதாக எண்ணுவது இல்லை. அழகென்பது ரோஜாக்களையோ அல்லது அதிலுள்ள முட்களையோ அல்ல, அனுபவிக்க கூடியவையும் அழகு அல்ல,அழகென்பது ரசிக்க கூடியது, உதாரணம் அழகென்பது ரோஜா செ டி முள்ளும் மலரும் இலையும் காம்பும் கொண்டது. வாழ்க்கையும் இப்படிதான் வாழும்போது வாழ்க்கையை விளங்கமுடியவில்லை என்று குறை கூறுபவர்கள், தாம் இதனை வாழும்போது கூறிகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கு என்று வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் படகினை பரந்து விரிந்து கிடக்கும் கடலின் மீது செலுத்த முடியும், காலநிலை மாறுபட்டாலும் படகினை தரையில் செலுத்த முடியாது... படகை செலுத்த நீர் தான் வேண்டும். இயற்கை எதை எதை மாற்ற வேண்டும் என்ற பே தமின்றி மாற்றுகிறது. மனிதனின் மனதில் எழுகின்ற உச்ச கட்ட எண்ண அலைகளை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒப்பிட முடியும், வியக்க வைப்பது விஞ்ஞானம் என்று கூறுபவர்கள் விசித்திரமான மறு முனையை சற்று தள்ளி வைக்கிறார்கள்.

மாற்றங்கள்

மாற்றங்கள் தேவை மண்ணில் அல்ல மனிதர்களின் மனதில் வெளியே வெண்மையுடனும் உள்ளே கருமையுடனும் உலா வரும் மனிதர்கள் ஏராளம் உலகில் எங்கு சென்றாலும் இத்தகைய மனிதர்களை காண்பது எளிது நல்ல மனிதர்களை காண்பதென்பது மிக மிக அரிது மனிதர்களின் மனம் மாறாதவரை செயல்களில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது அவ்வாறு மாற்றம் இருந்தாலும் ஏதோ உள் நோக்கம் இருக்கும் மனதில் உள்ளதை எம்மால் அறிய முடியாது இறைவன் ஒருவனே அதை அறிவான் பேசும் போது கேட்க நன்றாக இருக்கும் பிறகு பார்த்தல் செயல்கள் மிக மோசமாக இருக்கும் எங்கு சென்றாலும் எத்தனை அறிவுரைகளை பெற்றாலும் மனதில் மாற்றம் வரும் வரை செயல்களில் உண்மையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது மனதில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏங்கும் மபாஸ் பரீத்

நேசம் ..

நிலவின் வெப்பத்தை இரவில் அனுபவிததுண்டா ?? அழகிய குறிஞ்சிப்பூவின் மொட்டை திறந்ததுபர்ததுண்டா ?? சிரித்துக்கொண்டு பிறந்த குழந்தையை கண்டதுண்டா ?? முதல் முதல் சொன்ன பொய்யின் ஆழம் அறிந்ததுண்டா ?? இல்லையனின் நீ உன்னை நேசி உலகம் உன்னை நேசிக்கும். மபாஸ் பரீத்

காதல்

உண்மையை சொல்கிறேன் காதலிக்காதீர்கள் ஏனனில் காதல் அவ்வளவு கடினமானதல்ல . காதல் தெய்வீகமானது. தயவுசெய்து கடவுளை கேலி செய்யாதீர் சகோதரா !!!