மாற்றங்கள்

மாற்றங்கள் தேவை மண்ணில் அல்ல மனிதர்களின் மனதில்
வெளியே வெண்மையுடனும் உள்ளே கருமையுடனும் உலா வரும் மனிதர்கள் ஏராளம்
உலகில் எங்கு சென்றாலும் இத்தகைய மனிதர்களை காண்பது எளிது
நல்ல மனிதர்களை காண்பதென்பது மிக மிக அரிது
மனிதர்களின் மனம் மாறாதவரை செயல்களில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது
அவ்வாறு மாற்றம் இருந்தாலும் ஏதோ உள் நோக்கம் இருக்கும்

மனதில் உள்ளதை எம்மால் அறிய முடியாது
இறைவன் ஒருவனே அதை அறிவான்
பேசும் போது கேட்க நன்றாக இருக்கும்
பிறகு பார்த்தல் செயல்கள் மிக மோசமாக இருக்கும்

எங்கு சென்றாலும் எத்தனை அறிவுரைகளை பெற்றாலும்
மனதில் மாற்றம் வரும் வரை
செயல்களில் உண்மையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது

மனதில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏங்கும்
மபாஸ் பரீத்

Comments

Popular posts from this blog

சீதனக் கொடுமை

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

முற்று பெரும் வாழ்வு.