Posts

Showing posts from 2017
தனிமை மலர் மீண்டும் என்னை ஆட்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும் மீண்டும் தனிமை  தனிமை வாழ்க்கையில் அதிகம் விரும்பிய ஒன்று  திருமணத்திற்கு பிறகும் அது இனித்தது.  வாரிசு ஒன்று வந்த பின்புதான் தெரிந்தது தனிமையின் வலி  தனிமை வலியது  அது பல விடயங்களை  மறக்க வைக்கிறது என்பது உண்மையன்று  தனிமை வலியது அது வாழ்க்கையை பிரட்டடிப்போடும் என்பதும் உண்மையானது   தனிமை வலியது தனிமையை கடைசிவரை வெல்ல முடியாமல் போய்விடும் என்ற ஏக்கத்துடன் என்னுடைய நிமிடங்கள் நகருகின்றன. மீண்டும் காதலிக்க வேண்டும் என்ற உணர்வு பிரியாத பிரிக்கமுடியாத சில வற்றை காதலிக்க மனது ஆசைகொள்கிறது உண்மைதான் தனிமை வலியது அந்த கும்மிருட்டில் ஒளிவீசும் வேப்பம் மரம் கூட அழகுதான்  வாருங்கள் எனது கண்களால் உலகை காணுவோம். உத்தேசமாக சொல்ல முடியாவிடினும் தோழமை உண்மையில் தோல்வியின் விதிவிலக்குத்தான்
மறதி இறைவனால் எனக்கு கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதுமான  பெரும் பொக்கிஷம்.
27 வருடங்கள் கணத்தோடுதான் கடந்திருக்கிறோம் மீள்  நிரப்ப முடியாத அந்த வலிகள், மன்னித்து மறக்க முடியாத அந்த நினைவுகள், வலி நிறைந்த வெளியில் சொல்லமுடியாமல் தவித்த  பரிதாப நிலைகள், பொருளாதார சரிவுகள்,   தூண்களை  இழந்த மண்டபங்கள் போல்  பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இன்றுவரை சுமந்திருக்கிறோம்., என்னவென்று சொல்வது இந்த விடுதலை போராட்டத்தை? இது தமிழ் போராட்டமல்ல, தமிழ் இன போராட்டம் அந்த போராட்டத்தை ஆயுதமேந்தியவர்களுடன் போராடி வென்று இருந்தால் பாராட்டலாம் ! நிராயுதபாணியாக ஆண்டவனை பிராதித்தவர்களுடன் போராடி வெல்வதை வெற்றியெண்டு கூறும் மானிடர்களை என்னவென்று சொல்வது?? 103 உடல்கள் இரண்டு பள்ளிகளிலும் அன்றயதினம் உடன் மாண்டவர்கள், அதன் பின் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள், இதனால் வாழ்நாள் வரை காயங்களுக்கு உள்ளாகி அதனால் இறந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள்  என கணக்கிட்டால் இரு பள்ளிகளிலும் தொழுதவர்களில் மிகச் சிலர் மட்டுமே தப்பி இருக்க கூடும். கிட்டத்தட்ட 100க்கு  மேட்பட்ட குடும்பங்களின் வேர்களை இறை ஆலயத்தில் பறித்தவர்களை  விடுதலை போராளிகள் என்பதை ஏற்றுக்கொள்ள தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. இ