Posts

Showing posts from 2018

சவூதி வாழ்க்கை..

Image
சவூதி வாழ்க்கை..  பொதுவாக சொல்லப் போனால் என்னுடைய இளமை காலங்களை  நான் பிரித்தானியாவில் கழித்தவன், பொழுது போக்குகள் அதிகம் கடந்துவிடாத எனது வாழ்க்கையில்  வேலை மட்டுமே எனது குறிக்கோள்.  வேலை நிமிர்த்தம் நான் அதிகம் இடங்களுக்கு பயணிக்கா விடினும்  சில முக்கிய இடங்களுக்கு பயணித்தவன்.  மிக அதிகமாக மனித நேயத்தை பின்பற்றுகின்ற அந்த நாட்டில் சில  மனிதாபிமானமற்ற விடயங்களையும் கண் முன்னாள் பார்த்தவன்.  பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் என்னுள் ஆணிவேராய் இருந்த ஒரு விடயம் மத்திய கிழக்கில் அதுவும் சவூதி அராபியாவில் சில காலம் தொழில்நிமித்தம் போக  வேண்டும் என்பதுதான். 19 வயதில் ஆரம்பித்த பிரித்தானியா பயணம் சுமார் 8.5 வருடங்களுக்கு பிறகு பூர்த்தியானது.  ஆனால் மத்திய கிழக்கில் பனி செய்ய வேண்டும் என்றால்  மேட்படிப்பு   சில படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆகையால் எனக்கு   என்னவென்று தெரியாத ஒரு படிப்பை படிக்க நண்பர்களும் குடும்பமும் உட்சாகமூட்ட  தொடங்கியது படிப்பு. திருமணமான பிறகும் இருவரும் படிக்கிறார்கள் என்று சிலர் வசைபாட பிள்ளை தூக்கும்  வயதில் புத்தகம் தூங்குகிறான் என்றும் சில
இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது  வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை  ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா  தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான்  இஷா  தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள்.  சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகிறது. அதிக நேரம் தாமதிக்காமல் எழுந்து வந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான், அன்று மட்டும் எதோ ஒன்று என்னை அழுத்தி பிடித்துக்கொண்டது. தொழுகை சம்பூரணமாக முடிந்தது.  அதுவரை சரியாக பார்த்துக்கூட இல்லாத மனிதர்கள் அதிகமானவர்களை அன்று நான் பார்த்தேன். ஒரு மௌலவி என்னுடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதோ சொன்னார் என்னிடமும் சம்மதங்கள் கேட்டார். இறுதியில் நல்லதொரு மார்க்க பிரச்சாரம்  நிகழ்த்தினார். அந