Posts

Showing posts from September, 2018
இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது  வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை  ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா  தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான்  இஷா  தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள்.  சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகிறது. அதிக நேரம் தாமதிக்காமல் எழுந்து வந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான், அன்று மட்டும் எதோ ஒன்று என்னை அழுத்தி பிடித்துக்கொண்டது. தொழுகை சம்பூரணமாக முடிந்தது.  அதுவரை சரியாக பார்த்துக்கூட இல்லாத மனிதர்கள் அதிகமானவர்களை அன்று நான் பார்த்தேன். ஒரு மௌலவி என்னுடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதோ சொன்னார் என்னிடமும் சம்மதங்கள் கேட்டார். இறுதியில் நல்லதொரு மார்க்க பிரச்சாரம்  நிகழ்த்தினார். அந