Posts

சவூதி வாழ்க்கை..

Image
சவூதி வாழ்க்கை..  பொதுவாக சொல்லப் போனால் என்னுடைய இளமை காலங்களை  நான் பிரித்தானியாவில் கழித்தவன், பொழுது போக்குகள் அதிகம் கடந்துவிடாத எனது வாழ்க்கையில்  வேலை மட்டுமே எனது குறிக்கோள்.  வேலை நிமிர்த்தம் நான் அதிகம் இடங்களுக்கு பயணிக்கா விடினும்  சில முக்கிய இடங்களுக்கு பயணித்தவன்.  மிக அதிகமாக மனித நேயத்தை பின்பற்றுகின்ற அந்த நாட்டில் சில  மனிதாபிமானமற்ற விடயங்களையும் கண் முன்னாள் பார்த்தவன்.  பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் என்னுள் ஆணிவேராய் இருந்த ஒரு விடயம் மத்திய கிழக்கில் அதுவும் சவூதி அராபியாவில் சில காலம் தொழில்நிமித்தம் போக  வேண்டும் என்பதுதான். 19 வயதில் ஆரம்பித்த பிரித்தானியா பயணம் சுமார் 8.5 வருடங்களுக்கு பிறகு பூர்த்தியானது.  ஆனால் மத்திய கிழக்கில் பனி செய்ய வேண்டும் என்றால்  மேட்படிப்பு   சில படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆகையால் எனக்கு   என்னவென்று தெரியாத ஒரு படிப்பை படிக்க நண்பர்களும் குடும்பமும் உட்சாகமூட்ட  தொடங்கியது படிப்பு. திருமணமான பிறகும் இருவரும் பட...
இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது  வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை  ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா  தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான்  இஷா  தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள்.  சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகிறது. அதிக நேரம் தாமதிக்காமல் எழுந்து வந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான், அன்று மட்டும் எதோ ஒன்று என்னை அழுத்தி பிடித்துக்கொண்டது. தொழுகை சம்பூரணமாக முடிந்தது.  அதுவரை சரியாக பார்த்துக்கூட இல்லாத மனிதர்கள் அதிகமானவர்களை அன்று நான் பார்த்தேன். ஒரு மௌலவி என்னுடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதோ சொன்னார் என்னிடமும் சம்மதங்கள் கேட்டார். இறுதியில் நல்லதொரு மார...
தனிமை மலர் மீண்டும் என்னை ஆட்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும் மீண்டும் தனிமை  தனிமை வாழ்க்கையில் அதிகம் விரும்பிய ஒன்று  திருமணத்திற்கு பிறகும் அது இனித்தது.  வாரிசு ஒன்று வந்த பின்புதான் தெரிந்தது தனிமையின் வலி  தனிமை வலியது  அது பல விடயங்களை  மறக்க வைக்கிறது என்பது உண்மையன்று  தனிமை வலியது அது வாழ்க்கையை பிரட்டடிப்போடும் என்பதும் உண்மையானது   தனிமை வலியது தனிமையை கடைசிவரை வெல்ல முடியாமல் போய்விடும் என்ற ஏக்கத்துடன் என்னுடைய நிமிடங்கள் நகருகின்றன. மீண்டும் காதலிக்க வேண்டும் என்ற உணர்வு பிரியாத பிரிக்கமுடியாத சில வற்றை காதலிக்க மனது ஆசைகொள்கிறது உண்மைதான் தனிமை வலியது அந்த கும்மிருட்டில் ஒளிவீசும் வேப்பம் மரம் கூட அழகுதான்  வாருங்கள் எனது கண்களால் உலகை காணுவோம். உத்தேசமாக சொல்ல முடியாவிடினும் தோழமை உண்மையில் தோல்வியின் விதிவிலக்குத்தான்
மறதி இறைவனால் எனக்கு கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதுமான  பெரும் பொக்கிஷம்.
27 வருடங்கள் கணத்தோடுதான் கடந்திருக்கிறோம் மீள்  நிரப்ப முடியாத அந்த வலிகள், மன்னித்து மறக்க முடியாத அந்த நினைவுகள், வலி நிறைந்த வெளியில் சொல்லமுடியாமல் தவித்த  பரிதாப நிலைகள், பொருளாதார சரிவுகள்,   தூண்களை  இழந்த மண்டபங்கள் போல்  பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இன்றுவரை சுமந்திருக்கிறோம்., என்னவென்று சொல்வது இந்த விடுதலை போராட்டத்தை? இது தமிழ் போராட்டமல்ல, தமிழ் இன போராட்டம் அந்த போராட்டத்தை ஆயுதமேந்தியவர்களுடன் போராடி வென்று இருந்தால் பாராட்டலாம் ! நிராயுதபாணியாக ஆண்டவனை பிராதித்தவர்களுடன் போராடி வெல்வதை வெற்றியெண்டு கூறும் மானிடர்களை என்னவென்று சொல்வது?? 103 உடல்கள் இரண்டு பள்ளிகளிலும் அன்றயதினம் உடன் மாண்டவர்கள், அதன் பின் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள், இதனால் வாழ்நாள் வரை காயங்களுக்கு உள்ளாகி அதனால் இறந்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள்  என கணக்கிட்டால் இரு பள்ளிகளிலும் தொழுதவர்களில் மிகச் சிலர் மட்டுமே தப்பி இருக்க கூடும். கிட்டத்தட்ட 100க்கு  மேட்பட்ட குடும்பங்களின் வேர்களை இறை ஆலயத்தில் பறித்தவர்களை  விடுதலை போராளிகள் எ...

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள்  கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்  கார் மேகம் கூட கண்ணீர் வடிக்கிறது  கன்னியரின் நிலை கண்டு, கண்சிமிட்டும் நேரத்தில் மின்னலும் மறைந்து போகிறது  காலம் கடந்த கன்னியரின் கவலை கண்டு. கடக்கும் காலமெல்லாம் கண்ணெதிரே கண்சிமிட்டி கால்மீது கால்போட்டு தாலாட்டு பாடுகிறது சீதனம், கண்ணுற்றோம் சீதன கொடுமைகளை களைந்திடுவோம், காதோடு காது வைத்து திருமணத்தை நடாதிடுவோம். தீண்டாமையையை தீண்டாத சமூகத்தில் சீதனம் மட்டும் தீட்டு போல் நீள்கின்றதொன்றாய், வாழ்கின்ற காலத்திலும் தடுத்திடுவோம் இதனை வாழாத காலத்தில் முற்றாக அழித்திடுவோம். ஆதலால் காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான். நன்றியுடன்.,

கணம் நிரம்பிய வலிகள்

அக்கினியால் கூட அணைக்க முடியவில்லை  எமது நினைவுகளை  அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள்  ஏன் அடி மனதினுள், கோழி வளர்த்து முட்டை விற்று பிழைப்பு நடாதுபவளின் மகன்தானே எப்படி எனக்கு மூன்று வேலை சோறு போடுவான் என்று நினைதாயோவ்?? நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில்!! எனது கேள்விக்கான பதில் யாது? ஒ.. மறந்துவிட்டாய? சந்தோசமாக வாழ்கிராயாடி? கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர்பாட்கவில்லை, முறிந்து பிரிந்து போகும் காதலே மீண்டும் வந்துவிடாதே எனது வாழ்வில் இப்பொழுதான் மரித்து உயிர்த்தெழுந்து இருக்கிறேன் மரிப்பின் வலியும் வேதனையும் அறிந்தவன் நான் மீண்டுமொரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை என் உடம்பில், உன்னை மறக்கும் வேளையில் மரணித்துவிட வேண்டும் என எழுதியவனும் நான்தான், உன் நினைவால் சிந்திய கண்ணீர் துளிகளை விட கசக்கியறிந்த கவிதைகள்தானடி அதிகம் அத்துணையும் வலிகள் நிரம்பிய பாரம் கூடிய கவிதை துளிகள். கடைசியாகத்தான் உணர்த்து கொண்டேன் துன்பங்களும் வலிகளும் நிரந்தரமல்ல இதுவும் கடந்து போகும்... மபாஸ் பரீத்.

நினைவுகள்

மறந்துபோய் கூட என்னால் மறக்க முடியவில்லை உன் நினைவுகளை மறக்க போகும் அக்கணம் மரணித்துவிட வேண்டும் உன் நினைவுகளுடன்.

கடினமாக கரையும் இதயம்

அனுதினமும் உன்னை நிணைதேன், ஆசையுடன் உன்னை அழைத்தேன், அருகில் நீ இருப்பாய் என நிணைத்தேன், ஆசையுடன் நீ தந்த அந்த கவருடன் கூடிய கடதாசி பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி என்னை பிழைக்க வைக்கிறது. நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை பெற முடியாத இடத்தில் தொலைத்ததை எண்ணி அழுவதக்கு, நான் ஒன்றும் தேவதாஸ் இல்லை தாடி வளர்த்து கையுடன் மதுபான போத்தலுடன் திரிவதக்கு, நான் ஒன்றும் உன்னைப் போல் இல்லை கணப் பொழுதில் கல்யானதுக்காய் காதலனை மாற்றுவதக்கு, என்னை நீ மறந்த அன்றே நான் உன்னை மறந்துவிட்டேன், கனத்துவிட்ட இதயம் கரைய மறுக்கின்றது, நீ விட்டு போன மறக்க முடியாத நினைவுகளை. கவி விட்டு கரைத்து பார்க்கிறேன், கடினமாக கரைகிறது என் இதயம் இனி நான் நானாக வாழவேண்டும் என் நெஞ்சு நிறைந்த காதலின் நினைவோடு,,,,

முதல் கவிதை

ஒரு கோடி வானவில் ஓராயிரம் நட்சத்திரம் ஒருமித்த வானமதில் ஒரு வண்ண தேவதையாய் ஒரு நிலா அவள்... ஒரு முறை பார்தால் போதும் ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம் ஒரு நாளிகை பார்க்க வேண்டி ஒரு ஜென்மம் தவமிருந்து ஒரு கோடி கண்களுடன் ஓடக்கரை தேர் அருகில் ஒரு நாள் காத்திருந்தேன் ஒரு மயில் தூரத்தில் ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு ஒதுங்கி நின்ற என்னை பார்த்து ஓ வென்று அழுதவலாய் ஒரு வார்த்தை சொன்னால் ... மறந்து விடு என்னை.... அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம் அவளின் வருங்கால கணவனோடு... (தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

கைவிடப்பட்ட காதலன்

நட்பு காதல் பிரிவு அனுபவிக்கும் போதுதான் அர்த்தங்கள் உணரப்படுகின்றன. நட்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எண்ணுள்ள ஏற்பட்ட மாற்றம் உன்னை காதலிக்க வைத்தது. நீ என்னை புரிந்து கொண்ட புரிதலின் வலிமை நம் பிரிவு வேரூன்ற வழிவகுத்தது. மனமிணைந்த எம்மை உன் தந்தையின் தன்மானம் பிரித்து விட்டது. பிரிதலின் வலியை நான் இன்னும் அனுபவிக்கிறேன். என்னால் காதல் வயப்பட்ட நீ நன்றாக வாழவேண்டும். உனக்கு பிறக்கபோகும் ஆண் குழந்தைக்கு என் பெயரை மட்டும் வைத்து விடாதே, ஏன் பெயர் மீது கொண்ட சாபம் (பாசம் )என்னோடு போகட்டும் கணவனுடன் சந்தோசமாக வாழ்கிறாய் என்று கேளிவியுரும் பொதுகண்களால் வழிந்தோடும் ஆனந்தக் கண்ணீரால் மனது சற்று தளர்துதான் போகிறது எனது பிராத்தனைகள் கூடஇப்போது உனக்காகவும்தான், மீண்டும் உன்னை பார்த்துவிடக்கூடாது என்று எத்துனை விடயங்களை செய்ய துணியும் எனக்கு என்னவோ என் காதலை மட்டும் வெளிப்படுத்த முடியவில்லை. என்னதான் ஒருதலைப் பட்சம் என்று நீ நினைத்தாலும் சத்தியமாக நான் உன்னை காதலித்த காதல் பொய்யானது என்று நினைத்துவிடாதே ஏனனில் நான் காதலித்தது நிஜம், என்னால் நீ காதலிக்கப்பட்டது நிஜம், நான் உன்னை மறக்க நினைப்...

முடியாத முயற்சி

அவளை நினைத்து தூங்குகையில் பசி கூட ருசியாய் இருக்கிறது அவள் வார்த்தை மட்டும் செவிகளில் ரீங்காரமிட தெளிந்த நீரோடை போன்ற அவள் முகம் மட்டும் கானல் நீராய் கன்முன்னே கலைந்து போக ஏதோ சாதிட்டு விட்ட சந்தோஷத்தில் நான் பிரிந்த காதல் சுவடுகளை கவி விட்டு அழித்துக்கொண்டு,,, முடியாத முயற்சி முடிந்தவரை முயற்சிப்பது என் மூச்சி

சீதனக் கொடுமை

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும் வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம் பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம் ஆறேழு லட்சம் என்றால்.... சீதனம் கொடுக்கும் , வாங்கும் அனைவரும் பச்சை விபச்சாரிகளே... பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும் தந்தையை விட ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற வியாபாரிகளே கவனமாய் இருங்கள். தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது உங்கள் தவறான கொள்ளையடிப்பினால் நாளை உனக்கும் எயி்ட்ஸை விட கொடிய நோய் வரலாம்... கரும்புத் தோட்டத்தில் களவிலே பிடிபட்டாலும் பரவாயில்லை என் பிள்ளைக்கு காசு கொடுத்தால் ஆயிரம் மாப்பிள்ளை வருவான்... பார்த்தாயா சகோதரனே... உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான் உன்னை விட வீதியில் செல்லும் நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்

வாழ்க்கை

அன்புக்கான ஏக்கம் அனுபவிக்கும் போதுதான் உணரப்படும். அதனால் தான் என்னவோ தெரியவில்லை, பலவிடயங்களில் அடிபட்ட பிறகுதான் வலிகள் உணரப்படுகின்றன. அடிக்கும் போதும் அடிபடும் போதும் இதைப்பற்றி பெரிதாக எண்ணுவது இல்லை. அழகென்பது ரோஜாக்களையோ அல்லது அதிலுள்ள முட்களையோ அல்ல, அனுபவிக்க கூடியவையும் அழகு அல்ல,அழகென்பது ரசிக்க கூடியது, உதாரணம் அழகென்பது ரோஜா செ டி முள்ளும் மலரும் இலையும் காம்பும் கொண்டது. வாழ்க்கையும் இப்படிதான் வாழும்போது வாழ்க்கையை விளங்கமுடியவில்லை என்று குறை கூறுபவர்கள், தாம் இதனை வாழும்போது கூறிகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கு என்று வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் படகினை பரந்து விரிந்து கிடக்கும் கடலின் மீது செலுத்த முடியும், காலநிலை மாறுபட்டாலும் படகினை தரையில் செலுத்த முடியாது... படகை செலுத்த நீர் தான் வேண்டும். இயற்கை எதை எதை மாற்ற வேண்டும் என்ற பே தமின்றி மாற்றுகிறது. மனிதனின் மனதில் எழுகின்ற உச்ச கட்ட எண்ண அலைகளை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒப்பிட முடியும், வியக்க வைப்பது விஞ்ஞானம் என்று கூறுபவர்கள் விசித்திரமான மறு முனையை சற்று தள்ளி வைக்கிறார்கள். ...

மாற்றங்கள்

மாற்றங்கள் தேவை மண்ணில் அல்ல மனிதர்களின் மனதில் வெளியே வெண்மையுடனும் உள்ளே கருமையுடனும் உலா வரும் மனிதர்கள் ஏராளம் உலகில் எங்கு சென்றாலும் இத்தகைய மனிதர்களை காண்பது எளிது நல்ல மனிதர்களை காண்பதென்பது மிக மிக அரிது மனிதர்களின் மனம் மாறாதவரை செயல்களில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது அவ்வாறு மாற்றம் இருந்தாலும் ஏதோ உள் நோக்கம் இருக்கும் மனதில் உள்ளதை எம்மால் அறிய முடியாது இறைவன் ஒருவனே அதை அறிவான் பேசும் போது கேட்க நன்றாக இருக்கும் பிறகு பார்த்தல் செயல்கள் மிக மோசமாக இருக்கும் எங்கு சென்றாலும் எத்தனை அறிவுரைகளை பெற்றாலும் மனதில் மாற்றம் வரும் வரை செயல்களில் உண்மையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது மனதில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏங்கும் மபாஸ் பரீத்

நேசம் ..

நிலவின் வெப்பத்தை இரவில் அனுபவிததுண்டா ?? அழகிய குறிஞ்சிப்பூவின் மொட்டை திறந்ததுபர்ததுண்டா ?? சிரித்துக்கொண்டு பிறந்த குழந்தையை கண்டதுண்டா ?? முதல் முதல் சொன்ன பொய்யின் ஆழம் அறிந்ததுண்டா ?? இல்லையனின் நீ உன்னை நேசி உலகம் உன்னை நேசிக்கும். மபாஸ் பரீத்

காதல்

உண்மையை சொல்கிறேன் காதலிக்காதீர்கள் ஏனனில் காதல் அவ்வளவு கடினமானதல்ல . காதல் தெய்வீகமானது. தயவுசெய்து கடவுளை கேலி செய்யாதீர் சகோதரா !!!

தாய்

கடன் தீர வில்லை அம்மா உனக்கு நான் தர வேண்டிய ஈன்ற கடன், முடியவில்லை அம்மா என்னால் முடியும் வரை முயட்சிக்கிரன் முடிந்தவரை உன்னுடன் இருக்க, சொந்தங்களை காட்டி வளர்த்தாய் சொத்து களுக்காய் பிரியும் என்றாய் சொன்னது போல் நடந்தது அம்மா, தந்தையை காட்டியது கூட இல்லை அம்மா தந்தை இல்லை என்பது கூட தெரியவில்லை தந்தையாக கூட இருந்தாய் அம்மா, புது யுகம் காட்டினாய் அம்மா புது ஆடை அணிவிதாய் அம்மா புதிதாய் நீ உடுத்ததில்லை அம்மா, பண்புள்ளவனாய் வளர்த்தாய் அம்மா படிப்பும் கூட ஊற்றினாய் அம்மா படி ஏற வைக்கவில்லை அம்மா நீ, அன்னையாக மட்டும் இல்லை அம்மா அனைத்துமாய் இருந்தாய் அம்மா அருகிலில்லை எனும்போது அழுகின்றேன் அம்மா, உலகறிய வைத்தாய் அம்மா நீ உயிருள்ள வரை உன்னை உளமார பாராட்ட வேண்டும் அம்மா, கலப்படமற்ற உள்ளம் அம்மா உனது கற்பை கூட காப்பாற்றினாய் அம்மா எனது கள்ளரயில் கூட காணிக்கை கட்டனும் அம்மா, கடைசியாக கூறவேண்டும் அம்மா மறு ஜென்மம் ஒன்று இருந்தால் நான் உனக்கு மகனாக பிறக்கவேணும் அம்மா தங்கை எனக்கு மகளாக பிறக்க வேண்டும் அம்மா, கூலிவேல செய்தாவது உனக்கு கூழ் ஊத்த வேணும் அம்மா உன் கூடவே வாழ்த்து உன் மடியில் ...

அழகிய ஐரோப்பா

அழகான பெண்களை அதிகம் காண கிடைத்தது ஐரோப்பாவில். அளவு குறைந்த ஆடைகளுடன், அளவுக்கு மிகுதியான முகப்பூச்சு முகத்திலும், வெறுமனே பொறாமையும் வஞ்சகமும் கூடிய காழ்புணர்வு அகத்திலும், கை எடுத்து கும்பிட வேண்டிய பெண் இனம் காலடியில் குடிபோதையில் தன்னைத் தெரியாது கிடப்பதை கண்டு மனம் வெம்புகிறது. அவளை நினைத்து, அல்ல அவள் ஒரு காலத்தில் இவளை ஒத்த பெண்ணுக்கு பிறந்து இருப்பாளா, அல்லது இவளை ஒத்த பெண்ணை ஈன்றெடுப்பாளா என்ற எண்ணம் மேலோங்குகையில். வார இறுதி விடுமுறை நாட்கள் வாழ்வில் வரக்கூடாத நாட்கள் ஐரோப்பிய பெண்களுக்கு, இயற்கை அழிவுகள் என்பது பூமித்தாய் பொறுக்காமல் பொங்கி எழும் நிகழ்வுகள் எனலாம். ஐரோப்பா நாடுகளில் இரவு விடுதிகளையும் சில தங்குமிட களியாட்ட விடுதிகளையும் முற்றாக நிறுத்தினால் இயற்கை அனர்த்தத்தின் பாதியும், திருமணத்தை கட்டாயப்படுத்தினால் முழு அளவிலான இயற்கை அனைர்த்தங்களையும் நிறுத்த முடியும் என்கின்ற எண்ணம் பலரிடம் ஆணித்தரமாக உள்ளது என்ற விடயம் சற்று விஞ்ஞானிகளைம் அதிர்ச்சிக்குள்ளாகி சிந்திக்க தூண்டுகிறது. மிகுதி சில்லறையில் தெரியாமல் குறையும் ஒரு சதத்திக்கு கணக்கு கேட்கும் அல்லது ஒரு சதத்திக...

முற்று பெரும் வாழ்வு.

ரோஜாவின் வாசம் மனிதனுக்கு கிடைத்த மாபெரிய பொக்கிஷம், தண்ணீரின் சுவை இயற்கையின் அமிர்தம், அதிகாலை இளம் சூடு உற்சாகத்தின் புதிய மாத்திரை, காலை நேர மர நிழல் தூக்கம் ஆயுளை கூட்ட சிறந்த வழி, புண்முறுவலுடன் கூடிய முகம் மகிழ்ச்சியின் மறு பிறப்பு, அறியாத வயதில் கிடைத்த முதல் நண்பன் தோழமையின் படிக்கட்டு, பெற்றுக்கொண்ட அறிவு அனுபவிக்க போதுமான ஆதாரம், தாய் தந்தை வாழ்வின் ஆணி வேர், சொந்த பந்தம் அவமானதின் முதல் வழி, முதல் காதல் சகல பந்தத்திக்குமான விதிவிலக்கு, மனைவி மகிழ்ச்சி யாக இருக்கும் பொது மகிழ்விப்பவள், நண்பர்கள் தோல்வின் வெற்றிப் படிக்கட்டுகள், பட்டங்கள் பார்த்த,கிடைத்த வேலைகளுக்கான இலஞ்சங்கள், மொத்தத்தில் மனித வாழ்வு மனிதனுக்கு இடப்பட்ட சாபம், விடியலை நோக்கிய பயணம் என்றும் சாபவிமொர்சனதிக்காகவும் பயனளிக்கட்டும். நன்றியுடன் மபாஸ் பரீத்.