கொடுக்க முடியவில்லை வாழ்நாள் முழுதுமாய் உழைத்த போதிலும் கொடுக்க முடியவில்லை வாழ்வாதாரம் முடிகின்ற போதிலும் கொடுக்க முடியவில்லை என்னால் , முழுவதும் சிவந்த அந்த உயிரினால் கேட்க கூட முடியவில்லை. தான் சுமந்த பத்து மாத கடனினை
அன்புக்கான ஏக்கம் அனுபவிக்கும் போதுதான் உணரப்படும். அதனால் தான் என்னவோ தெரியவில்லை, பலவிடயங்களில் அடிபட்ட பிறகுதான் வலிகள் உணரப்படுகின்றன. அடிக்கும் போதும் அடிபடும் போதும் இதைப்பற்றி பெரிதாக எண்ணுவது இல்லை. அழகென்பது ரோஜாக்களையோ அல்லது அதிலுள்ள முட்களையோ அல்ல, அனுபவிக்க கூடியவையும் அழகு அல்ல,அழகென்பது ரசிக்க கூடியது, உதாரணம் அழகென்பது ரோஜா செ டி முள்ளும் மலரும் இலையும் காம்பும் கொண்டது. வாழ்க்கையும் இப்படிதான் வாழும்போது வாழ்க்கையை விளங்கமுடியவில்லை என்று குறை கூறுபவர்கள், தாம் இதனை வாழும்போது கூறிகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கு என்று வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை என்னும் படகினை பரந்து விரிந்து கிடக்கும் கடலின் மீது செலுத்த முடியும், காலநிலை மாறுபட்டாலும் படகினை தரையில் செலுத்த முடியாது... படகை செலுத்த நீர் தான் வேண்டும். இயற்கை எதை எதை மாற்ற வேண்டும் என்ற பே தமின்றி மாற்றுகிறது. மனிதனின் மனதில் எழுகின்ற உச்ச கட்ட எண்ண அலைகளை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒப்பிட முடியும், வியக்க வைப்பது விஞ்ஞானம் என்று கூறுபவர்கள் விசித்திரமான மறு முனையை சற்று தள்ளி வைக்கிறார்கள். ...
இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான் இஷா தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள். சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகிறது. அதிக நேரம் தாமதிக்காமல் எழுந்து வந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான், அன்று மட்டும் எதோ ஒன்று என்னை அழுத்தி பிடித்துக்கொண்டது. தொழுகை சம்பூரணமாக முடிந்தது. அதுவரை சரியாக பார்த்துக்கூட இல்லாத மனிதர்கள் அதிகமானவர்களை அன்று நான் பார்த்தேன். ஒரு மௌலவி என்னுடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதோ சொன்னார் என்னிடமும் சம்மதங்கள் கேட்டார். இறுதியில் நல்லதொரு மார...
அழகான பெண்களை அதிகம் காண கிடைத்தது ஐரோப்பாவில். அளவு குறைந்த ஆடைகளுடன், அளவுக்கு மிகுதியான முகப்பூச்சு முகத்திலும், வெறுமனே பொறாமையும் வஞ்சகமும் கூடிய காழ்புணர்வு அகத்திலும், கை எடுத்து கும்பிட வேண்டிய பெண் இனம் காலடியில் குடிபோதையில் தன்னைத் தெரியாது கிடப்பதை கண்டு மனம் வெம்புகிறது. அவளை நினைத்து, அல்ல அவள் ஒரு காலத்தில் இவளை ஒத்த பெண்ணுக்கு பிறந்து இருப்பாளா, அல்லது இவளை ஒத்த பெண்ணை ஈன்றெடுப்பாளா என்ற எண்ணம் மேலோங்குகையில். வார இறுதி விடுமுறை நாட்கள் வாழ்வில் வரக்கூடாத நாட்கள் ஐரோப்பிய பெண்களுக்கு, இயற்கை அழிவுகள் என்பது பூமித்தாய் பொறுக்காமல் பொங்கி எழும் நிகழ்வுகள் எனலாம். ஐரோப்பா நாடுகளில் இரவு விடுதிகளையும் சில தங்குமிட களியாட்ட விடுதிகளையும் முற்றாக நிறுத்தினால் இயற்கை அனர்த்தத்தின் பாதியும், திருமணத்தை கட்டாயப்படுத்தினால் முழு அளவிலான இயற்கை அனைர்த்தங்களையும் நிறுத்த முடியும் என்கின்ற எண்ணம் பலரிடம் ஆணித்தரமாக உள்ளது என்ற விடயம் சற்று விஞ்ஞானிகளைம் அதிர்ச்சிக்குள்ளாகி சிந்திக்க தூண்டுகிறது. மிகுதி சில்லறையில் தெரியாமல் குறையும் ஒரு சதத்திக்கு கணக்கு கேட்கும் அல்லது ஒரு சதத்திக...
Comments
Post a Comment