Posts

Showing posts from 2012

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள்  கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்  கார் மேகம் கூட கண்ணீர் வடிக்கிறது  கன்னியரின் நிலை கண்டு, கண்சிமிட்டும் நேரத்தில் மின்னலும் மறைந்து போகிறது  காலம் கடந்த கன்னியரின் கவலை கண்டு. கடக்கும் காலமெல்லாம் கண்ணெதிரே கண்சிமிட்டி கால்மீது கால்போட்டு தாலாட்டு பாடுகிறது சீதனம், கண்ணுற்றோம் சீதன கொடுமைகளை களைந்திடுவோம், காதோடு காது வைத்து திருமணத்தை நடாதிடுவோம். தீண்டாமையையை தீண்டாத சமூகத்தில் சீதனம் மட்டும் தீட்டு போல் நீள்கின்றதொன்றாய், வாழ்கின்ற காலத்திலும் தடுத்திடுவோம் இதனை வாழாத காலத்தில் முற்றாக அழித்திடுவோம். ஆதலால் காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான். நன்றியுடன்.,

கணம் நிரம்பிய வலிகள்

அக்கினியால் கூட அணைக்க முடியவில்லை  எமது நினைவுகளை  அழித்தும் அழியாததுமாய் நீ தந்த நினைவலைகள்  ஏன் அடி மனதினுள், கோழி வளர்த்து முட்டை விற்று பிழைப்பு நடாதுபவளின் மகன்தானே எப்படி எனக்கு மூன்று வேலை சோறு போடுவான் என்று நினைதாயோவ்?? நிரந்தரமாய் பிரியப்போகிறாய் என்றால் நில்!! எனது கேள்விக்கான பதில் யாது? ஒ.. மறந்துவிட்டாய? சந்தோசமாக வாழ்கிராயாடி? கண்ணீர் கலந்த பதிலை நான் எதிர்பாட்கவில்லை, முறிந்து பிரிந்து போகும் காதலே மீண்டும் வந்துவிடாதே எனது வாழ்வில் இப்பொழுதான் மரித்து உயிர்த்தெழுந்து இருக்கிறேன் மரிப்பின் வலியும் வேதனையும் அறிந்தவன் நான் மீண்டுமொரு முறை உயிர்த்தெழும்ப வலிமை இல்லை என் உடம்பில், உன்னை மறக்கும் வேளையில் மரணித்துவிட வேண்டும் என எழுதியவனும் நான்தான், உன் நினைவால் சிந்திய கண்ணீர் துளிகளை விட கசக்கியறிந்த கவிதைகள்தானடி அதிகம் அத்துணையும் வலிகள் நிரம்பிய பாரம் கூடிய கவிதை துளிகள். கடைசியாகத்தான் உணர்த்து கொண்டேன் துன்பங்களும் வலிகளும் நிரந்தரமல்ல இதுவும் கடந்து போகும்... மபாஸ் பரீத்.