சீதனக் கொடுமை

ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன

பெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு

அவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற

எண்ணக் குதங்களுக்கு எரிகொள்ளி


ஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்

வைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்

பணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை

சுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு


பிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்

ஆறேழு லட்சம் என்றால்....

சீதனம் கொடுக்கும் , வாங்கும்

அனைவரும் பச்சை விபச்சாரிகளே...


பெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்

தந்தையை விட

ஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற

வியாபாரிகளே கவனமாய் இருங்கள்.தகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது

உங்கள் தவறான கொள்ளையடிப்பினால்

நாளை உனக்கும் எயி்ட்ஸை விட

கொடிய நோய் வரலாம்...


கரும்புத் தோட்டத்தில் களவிலே

பிடிபட்டாலும் பரவாயில்லை

என் பிள்ளைக்கு காசு கொடுத்தால்

ஆயிரம் மாப்பிள்ளை வருவான்...பார்த்தாயா சகோதரனே...

உன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்

உன்னை விட வீதியில் செல்லும்

நாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்


Comments

Popular posts from this blog

காத்திருக்கும் காலம் மட்டும் நீயும் என்னுள் கசக்கி எறியப்பட்ட கவிதை காகிதம் தான்

முற்று பெரும் வாழ்வு.